கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேற்று (மே 18) பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தங்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால், பாபநாசம் வன சோதனைச் சாவடியில் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என தீவிர பரிசோதனைக்கு பின்னரே அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.