களக்காடு அருகே நடுச்சாலை புதூரைச் சேர்ந்த பெட்டிகடை உரிமையாளர் விக்னேஷ் (26) என்பவர், களக்காடு வந்தபோது ரூ.2000 பணத்துடன் தனது மணிபர்ஸை அம்பேத்கர் சிலை அருகே தவறவிட்டார். இதனை ஹரிஹரன் என்பவர் கண்டெடுத்து, நேர்மையுடன் களக்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் பர்ஸில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு, மணிபர்ஸை தொலைத்த விக்னேஷிடம் இன்று ஒப்படைத்தனர். நேர்மையுடன் செயல்பட்ட ஹரிஹரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.