சேரை: பேராசிரியர்கள் விடிய விடிய போராட்டம்

978பார்த்தது
சேரை அருகே உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான மனோ கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, கல்லூரியில் இரவு முழுவதும் பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் நேற்று மாலை முதல் இரவு விடிய விடிய கல்லூரியில் தங்கினர். பிற கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றியதை போல தங்கள் கல்லூரியையும் மாற்ற வேண்டும் என்று ஒரு பேராசிரியர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி