நெல்லை மாவட்டம் முழுவதும் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்த நிலையில், நேற்று இரவு மீண்டும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக அம்பாசமுத்திரம் நகர் பகுதியில் நேற்றிரவு திடீரென பலத்த மழை கொட்டியது. இதனால் அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில கடைகளை தண்ணீர் சூழ்ந்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மழைக்கு ஒதுங்க மக்கள் ஆங்காங்கே தஞ்சம் புகுந்தனர்.