முக்கூடலில் பகுதியில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கைரேகை பதிவுகள் மற்றும் இன்டர்நெட் சரியாக வேலை செய்யாதது போன்ற காரணங்களால் மிகவும் மந்தமாக நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கடும் குளிர் மற்றும் கொசுக்கடியையும் பொருட்படுத்தாமல் மக்கள் இரவிலும் பரிசு தொகுப்பு வாங்கிச் சென்றனர். நெட்வொர்க் பிரச்சனைகள் பெரும் இன்னல்களை ஏற்படுத்தின.