பாப்பாக்குடி: ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவரை வெட்டிய இருவர் கைது

1405பார்த்தது
பாப்பாக்குடி: ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவரை வெட்டிய இருவர் கைது
பாப்பாக்குடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (எ) சுந்தர், கூட்டாளி உதயா உள்ளிட்ட மூவர், நேற்று முன்தினம் (மே 16) ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 30 வயதுடைய ஒருவரை அரிவாளால் வெட்டினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரின் பைக்கை அரிவாளால் வெட்டி சேதப்படுத்திய பின் மூவரும் தப்பிச் சென்றனர். போலீசார் சுந்தரம், உதயா ஆகிய இருவரைக் கைது செய்து, மற்றொருவரைத் தேடி வருகின்றனர். சுந்தரம் ரவுடி பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி