சேரன்மகாதேவியை சேர்ந்த மூக்காண்டி பைனான்ஸ் நிறுவனம் தொடங்க லைசன்ஸ் கேட்டு, பெண் விஏஓ இதயக்கனி ரூ. 10,000 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து மூக்காண்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திட்டமிட்டபடி இன்று இதயக்கனியிடம் பணம் வழங்கியபோது, போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். புரோக்கர் வெங்கடேசனும் கைது செய்யப்பட்டார்.