பாப்பாக்குடி போலீஸ் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரகசிய தகவலின் அடிப்படையில் பாப்பாக்குடி அருகே நின்று கொண்டிருந்த சொரிமுத்துராஜ் (30) என்பவரை சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சொரிமுத்துராஜை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.