
நாங்குநேரி; காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் நீக்கம்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏவுக்கு எதிராக செயல்பட்ட இருவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அவை உறுப்பினர் தனி தங்கம், களக்காடு ஒன்றிய தலைவர் பிராங்ளின் ஆகிய இருவர் மற்றும் கன்னியாகுமரி சேர்ந்த ஜோஸ்லால் ஆகிய மூவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.




































