நாங்குநேரி போலீசார் நெடுங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த மர்ம கும்பல் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக செயல்பட்டு நவீன், நயினார், வான் மகேஷ் உட்பட ஏழு பேரை கைது செய்து, அவர்களிடம் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.