பணகுடி; பேனர் வைப்பதில் பாஜக திமுக இடையே மோதல்

0பார்த்தது
பண்ணகுடி இராமலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திமுக மற்றும் பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை இரு தரப்பினரும் கிழித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து, இரு தரப்பு நிர்வாகிகளையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.