நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் சென்றவர்களை சரமாரியாக வெட்டியதில், ஜான் என்ற மாற்றுத்திறனாளி மற்றும் செங்கல் சூளையில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி டிரானத் கட்டார் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த டிரானத் கட்டாரின் உடல் பாளை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.