நெல்லை நீதிமன்றம் முன்பு நேற்று முன்தினம் மாயாண்டி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 21) கொலை செய்யப்பட்ட மாயாண்டி குடும்பத்தினரை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.