நெல்லை; பிரபல முருகன் கோயிலில் பஞ்சமி வழிபாடு

414பார்த்தது
நெல்லை; பிரபல முருகன் கோயிலில் பஞ்சமி வழிபாடு
நெல்லை டவுனில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீவேணுவன குமாரர் முருகன் கோயிலில், மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, தேய்பிறை பஞ்சமியில் வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அந்த வகையில், சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இன்று ஸ்ரீ வாராஹி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் டவுன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி