சேரன்மாதேவி அருகே சக்திகுளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற சிலர், பழமைவாய்ந்த 3 ஐம்பொன் சிலைகளைக் கண்டெடுத்துள்ளனர். சுமார் 2 அடி உயரமுள்ள காளை மாட்டின் மீது அம்பாள் சிலையும், 1 அடி உயரமுள்ள அம்மன் ஐந்து முகங்களுடன் வீற்றிருக்கும் சிலையும், மற்றொரு பெண் தெய்வ சிலையும் மீட்கப்பட்டுள்ளன. இவை பல கோடி ரூபாய் மதிப்புடையவை என கூறப்படுகிறது. வருவாய்த்துறையினர் சிலைகளை மீட்டெடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.