நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நிர்வாகிகளிடம் உருக்கமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அவர், வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அனைவரும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒரு வாக்கு கூட மிஸ் ஆகக்கூடாது என்றும் வலியுறுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.