கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெரு அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் மனித மண்டை ஓடு மற்றும் சில எலும்புகள் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, மண்டை ஓடு மற்றும் எலும்புகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இது ஏதேனும் குற்றச்சம்பவத்துடன் தொடர்புடையதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.