திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ்(24) என்பவர் இன்று தச்சை சாலையில் சாந்தி என்பவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினைப் பறிக்க முயன்றார். பொதுமக்கள் ரமேஷைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தப்பிக்க முயன்றபோது வாகனத்தில் மோதி ரமேஷ் காயமடைந்ததாகவும், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.