வள்ளியூரில் ஜெயக்குமார் என்பவர் நடத்தி வரும் டீக்கடையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13, 14, 15 ஆகிய தினங்களில் ஒரு டீயை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யும் அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கடைக்கு வந்து டீ குடித்து மகிழ்கின்றனர். காதலர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு சலுகையை அறிவித்துள்ளதாக கடை உரிமையாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.