நாங்குநேரி அருகே சிறுமளஞ்சியைச் சேர்ந்த மனோஜ் விபத்தில் சிக்கி நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்க்க உறவினர்களான துரைச்சி, கிஷோர், சிவகாமி ஆகியோர் காரில் சென்றனர். வெள்ளமடம் அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த டெம்போ மீது கார் மோதியதில், காரில் சென்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரின் ஓட்டுநர் காயங்களுடன் தப்பினார். இந்த துயரச் சம்பவம் சிறுமளஞ்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.