வள்ளியூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (27) என்ற இளைஞர், 3 வயது சிறுமியை பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5000 அபராதமும், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.