
நெல்லை; மது விற்ற முதியவர் கைது
திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகராஜ் மற்றும் காவல் துறையினர் இன்று அன்பு நகர் சாலை பொதிகை மண்டபம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட சிந்துபூந்துறையைச் சேர்ந்த ரவி சங்கர் (53) என்பவரிடம் இருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.




































