சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, இன்று அதிகாலை நெல்லை பொன்னாக்குடி பாலத்தில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பேருந்தின் ஓட்டுநர் முகமத் அராபத் இடுப்பாடுகளில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த பாளை தீயணைப்பு வீரர்கள், சிக்கியிருந்த ஓட்டுநரையும் காயமடைந்த பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.