நெல்லை தென்காசியில் வெறிச்செயலில் ஈடுபட்ட போதை கும்பலில் அய்யப்பன் என்பவரை போலீசார் இன்று சுட்டுப் பிடித்தனர். அய்யப்பன் மீது ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் 1 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அய்யப்பனின் பெயர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.