நெல்லை: மூதாட்டி செயினை பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்

443பார்த்தது
நெல்லை: மூதாட்டி செயினை பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
நெல்லை மாவட்டம் கீழப்பாட்டம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செயினைப் பறிக்க முயன்றார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மருதூரைச் சேர்ந்த உதயகுமார் (19) என்பவர் இந்த வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதயகுமாரை இன்று கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி