அதிமுக விஐபிக்கள் படத்தை செருப்பால் அடித்த தொண்டர்கள்

1பார்த்தது
அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு குழுவாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாளை மார்க்கெட் அருகே இன்று எடப்பாடி பழனிச்சாமி குழுவைச் சேர்ந்தவர்கள், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரின் புகைப்படங்களை செருப்பால் அடித்தும், சாணத்தை ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி