ஆனிப்பெருந்திருவிழா; கால் நாட்டு வைபவம் உற்சாகம்

212பார்த்தது
டவுன் நெல்லையப்பர் கோயிலில் பிரசித்தி பெற்ற ஆனிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கால் நடுதல் இன்று நடைபெற்றது. ஜூன் 28ஆம் தேதி தொடங்கும் இந்த திருவிழா 30 நாட்கள் நடைபெறும். இதையொட்டி, காலுக்கு புதிய வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மகாதீபாரதனை காட்டப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட திருக்கால் கோவில் வாசல் மண்டபத்தில் நடப்பட்டு, திருவிழாவின் பூர்வாங்க பணிகள் தொடங்கின.

தொடர்புடைய செய்தி