மேலப்பாளையம் ஆமின்புரம் 6 வது தெருவில் உணவுக் கடை நடத்தி வரும் கோதர் கனி (36) என்பவரின் கடையில், கடந்த 5ம் தேதி அதிகாலையில் கார்த்திக், முகமது, சதாம் மற்றும் மைதீன் ஆகிய 4 பேர் தோசை கல்லைத் திருட முயன்றனர். இதைத் தட்டிக் கேட்டபோது, அவர்கள் கோதர் கனியின் மகன் மற்றும் மனைவியைத் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.