சுத்தமல்லி: மதுபோதையில் பேருந்து ஓட்டி விபத்து; ஓட்டுநர் கைது

1008பார்த்தது
சுத்தமல்லியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் இசக்கியப்பன் (30) இன்று (பிப்ரவரி 20) வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிச் சென்றபோது, சுத்தமல்லி அருகே ஆட்டோ மீது பேருந்து மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து ஓட்டுநர் மற்றும் பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். போலீஸ் விசாரணையில், இசக்கியப்பன் அதிக மதுபோதையில் பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி