நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் இமெயில் முகவரிக்கு இன்று ஒரு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இந்த தகவலின் பேரில், உதவி ஆணையாளர் சுரேஷ் தலைமையில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாயின் உதவியுடன் நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் விரிவான சோதனைகளை மேற்கொண்டனர்.