கலெக்டரிடம் மழலைகள் வைத்த கோரிக்கை

0பார்த்தது
மேலப்பாளையம் அம்பை சாலையில் உள்ள விஎஸ்டி பள்ளிவாசல் அருகே வேகத்தடை அமைக்கக் கோரி பள்ளி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் பள்ளி அருகில் இருக்கும் நிலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையைக் கடக்க சிரமமாக இருப்பதாகவும், எனவே அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.