நெல்லை: பள்ளி வாகனங்களில் கலெக்டர் அதிரடி ஆய்வு

755பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வாகனங்களின் தரம் மற்றும் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வருடாந்திர ஆய்வு இன்று பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகுமார் இந்த ஆய்வைத் தொடங்கி வைத்தார். பின்னர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி (பொ) செல்வி முன்னிலையில் பள்ளி வாகனங்களில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி