நெல்லை மாவட்டத்தில் உள்ள 1548 பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்புக்கு தயாராக உள்ளன. டவுன் அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகள், பள்ளி மேல்பகுதி, குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த அவர், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.