ராமையன்பட்டி பஞ்சாயத்து கூட்டம் தலைவர் டேவிட் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 4வது வார்டு கவுன்சிலர் மாரியப்ப பாண்டியன் மற்றும் 7வது வார்டு கவுன்சிலர் மனோகர் ஆகியோர் குடிநீர் தட்டுப்பாட்டை வலியுறுத்தி, குடங்களை மாலையாக அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வருவதாகவும், அதுவும் குறைவாக வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.