நெல்லை டவுன் சாலியர் தெரு பள்ளிவாசல் அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மில் இன்று ஒரு மயில் அடிபட்டு கிடந்தது. பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த போதிலும், ஒரு மணி நேரமாகியும் அவர்கள் வராததால், மின் ஊழியர் ஒருவர் காவல்துறை உதவியுடன் மயிலை மீட்டார். அவரது இந்த செயலைப் பொதுமக்கள் பாராட்டினர்.