டவுன் பகுதியில் உள்ள கால்வாயில் இன்று ஒரு ஆடு தவறி விழுந்தது. வெளியே வர முடியாமல் தவித்த ஆட்டை பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்து மீட்டனர். வீரர்கள் சவாலுடன் கால்வாயில் இறங்கி, கடும் போராட்டத்திற்குப் பிறகு ஆட்டை உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர். மேலே வந்த ஆடு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடியது. பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரின் செயலைப் பாராட்டி மகிழ்ந்தனர்.