முன்னீர் பள்ளம் அருகே தருவை பகுதியில் முப்பிடாதி என்பவர் வாத்து வளர்த்து வருகிறார். நேற்று இரவு, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குடிபோதையில் இலவசமாக வாத்து கறி கேட்டுள்ளனர். முப்பிடாதி மறுத்ததால், அவரை தாக்கி, அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட வாத்துகளை வாளால் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.