தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மேயர் ராமகிருஷ்ணன் பேசினார். தாமிரபரணி நதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் நீர் மாசுபடுவதாகவும், மது பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், துணிகள் போன்றவற்றை ஆற்றில் போடுவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.