டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு இன்று நெல்லையில் 658 பேர் எழுத இருந்த நிலையில், தேர்வு மைய குளறுபடியால் மாநிலம் முழுவதும் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பாளை தேர்வு மையத்தில் தேர்வர்கள் தேர்வறையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் வெளியேற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது.