தச்சநல்லூரைச் சேர்ந்த ஹரிஹரன் (25) மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (35) ஆகியோர் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மற்றும் கடலூர் சிறைகளில் நேற்று அடைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை துணை ஆணையர் மற்றும் ஆய்வாளரின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்டது.