தச்சையை சேர்ந்த தேவேந்திர குல எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் மீது கொலை, அடிதடி என 71 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் சிறையில் இன்று ஜாமீனில் வெளிவந்த அவரை, பெட்ரோல் குண்டு வழக்கு தொடர்பாக நெல்லை போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். கண்ணபிரானை கைது செய்யக் கூடாது என அவரது மனைவியும் உறவினர்களும் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.