போலீஸ் எஸ்ஐ பாஸ்கரின் மனைவி பிரேமா பாக்கியதாய், 19.06.2024 அன்று சுசி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் ரூ. 9,08,089க்கு வாங்கிய ஹூண்டாய் காரில் பல கோளாறுகள் ஏற்பட்டன. மேலும், கார் ஏற்கனவே வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், காரின் விலை ரூ. 9,08,089 மற்றும் காப்பீட்டுத் தொகை உட்பட மொத்தம் ரூ. 12,14,267-ஐ திருப்பி வழங்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.