மேலப்பாளையம் குறிச்சி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடிபட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரயிலில் அடிபட்டாரா அல்லது கீழே குதித்தாரா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.