நெல்லை கலெக்டருடன் எம்பி திடீர் சந்திப்பு

0பார்த்தது
நெல்லை கலெக்டருடன் எம்பி திடீர் சந்திப்பு
நெல்லை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஆனந்த் மோகன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அவரை பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நெல்லை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர்.