நெல்லை: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. 2 பெண்கள் கைது

610பார்த்தது
நெல்லை: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி.. 2 பெண்கள் கைது
திருநெல்வேலியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரிடம், சுகாதாரத்துறை ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரோஜினி ஆகியோர் ரூ. 8 லட்சம் பணம் பெற்றுள்ளனர். பின்னர், போலியான பணி நியமன ஆணையை வழங்கியதாகக் கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜித்குமார் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, சரோஜினி மற்றும் ராஜலட்சுமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி