தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நெல்லையில் நடைபெறுகிறது. இத்தேர்வை மொத்தம் 9284 பேர் எழுதுகின்றனர். இதற்காக 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, உயரதிகாரிகள் தலைமையில் சுமார் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.