நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் கைது

756பார்த்தது
நெல்லை:  சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் கைது
திருநெல்வேலி அருகே முத்தூா் பகுதியைச் சோ்ந்த உலகநாதன் (33), தனியாா் வங்கியில் கடன் வசூலிக்கும் முகவராகப் பணியாற்றி வந்துள்ளாா். இவா், தனக்குத் திருமணமாகி இருப்பதை மறைத்து 17 வயது சிறுமியுடன் பழகி, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் உலகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.