திருநெல்வேலியில் அமைய உள்ள மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 9) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.