தமிழ்நாடு முழுவதும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். பேட்டை ராணி அண்ணா அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.