நெல்லை: கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் மீது அரிவாள் வெட்டு

770பார்த்தது
நெல்லை: கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் மீது அரிவாள் வெட்டு
மேலப்பாளையத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 2007ல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, தண்டனை காலம் முடிந்த பிறகு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். நேற்று இரவு, அவரது ஆட்டோவில் பயணித்த குரு விக்னேஷ், பந்தல் மகாராஜா மற்றும் மற்றொருவர் சேர்ந்து ராமகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி